முதலில் Snapseed செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மற்றும் இந்த புகைப்படத்தை எடிட் செய்வதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்று இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.நமது இயல்பான புகைப்படத்தை Snapseed Appன் நமக்கு தேவையான Toolஐ ஒவ்வொன்றாக பயன்படுத்தி எவ்வாறு எளிமையான முறையில் Step by Step ஆக எடிட் செய்வது என்று பார்ப்போம்.
Step 1:
முதலில் Snapseed Appஐ திறக்கவும் திறந்தவுடன் அதில் + போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அது உங்களை Galleryகு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்வதற்கு பயன்படுத்தும் புகைப்படத்தை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் Snapseed Appன் முக்கியமான அனைத்து Toolளும் இருக்கும் எடிட்டிங் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.நாம் எடிட்டிங் செய்ய தேவையான புகைப்படத்தை தேர்வு செய்வதே Step 1 ஆகும்.
Step 2:
இந்த Step 2 செயல்முறை ஒரு நீண்ட செயல்முறையாகும். புகைப்படத்தை தேர்வு செய்தபின் கீழே காணப்படும் படத்தில் இருப்பது போன்று இருக்கும். இதில் கீழ் பகுதியில் Looks,Tools,Export என்ற மூன்று Option இருக்கும்.இதில் இரண்டாவதாக உள்ள Toolsஐ தொடவும். தொட்டவுடன் அதில் புகைப்படத்தை எடிட் செய்வதற்கு தேவையான அனைத்து Toolளும் அங்கு இருக்கும்.அதில் 16வதாக இருக்கும் Vintage Toolஐ தொடவும். தொட்டவுடன் இதில் 12 வகையான கலர் பில்டர் Option இருக்கும். இதில் முதலாவதாக இருக்கும் கலர் பில்டரை தேர்வுசெய்யவும்.தேர்வு செய்தவுடன் கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று இருக்கும்.இதில் முதலாவதாக Brightness இருக்கும் உங்களது விரலை புகைப்படத்தின் மீது வைத்து மேலே தள்ளும்போது Saturation,Style Strength,Vignette Strength என மொத்தமாக நான்கு Optionகள் இருக்கும். இதன் அளவுகளை நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் போன்று சரியாக வைத்து கொள்ளுங்கள் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை சரியாக வைத்தபின் வலது புறத்தின் கீழே √ இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.தொட்டவுடன் வலது புறத்தின் மேல் பகுதியில் முதலாவதாக உள்ள Edit Stack என்ற Optionஐ தொடவும். தொட்டவுடன் கீழ்பகுதியில் ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் நான்காவதாக உள்ள View edits என்பதை தொடவும்.தொட்டவுடன் வலது புறத்தின் கீழ் பகுதியில் vintage என்று அதன் அடிப்பகுதியில் < இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அதில் மூன்று எடிட்டிங் Option தோன்றும் அதில் நடுவில் உள்ள Optionஐ தொடவும். தொட்டவுடன் இடது பக்கத்தின் கீழ் பகுதியில் × இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதன் பக்கத்தில் உள்ள Optionஐ தொடவும். தொட்டவுடன் உங்களது புகைப்படம் முழுவதுமாக கருப்பு நிறத்தில் மாறிவிடும். இப்பொழுது புகைப்படத்தில் குறிப்பிட்ட நமது முகம் கை கால் அதாவது தோல் தெரியும் இடத்தினை மட்டும் விரலை வைத்து தேய்க்கும் போது கருப்பு நிறம் மறைந்துவிடும்.நீங்கள் இவ்வாறு அழிக்கும்போது தெரியாமல் வெளிப்புறத்தின் கருப்பு நிறத்தையும் அழித்துவிட்டால் அதனை மீண்டும் கொண்டுவர கீழ் பகுதியில் மேல்நோக்கிய அம்புக்குறி போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதனை நான்குமுறை தொடவும் தொட்ட பின் நீங்கள் தெரியாமல் அழித்த பகுதியின் மீது மீண்டும் தேய்க்கும் போது அந்த இடம் மீண்டும் கருப்பு நிறத்தில் மாறிவிடும்.
பிறகு கீழ் பகுதியில் கீழ் நோக்கிய அம்புக்குறி இருக்கும் அதனை நான்கு முறை தொடவும் தொட்ட பின் உங்களது புகைப்படத்தில் தோல் தெரியும் இடத்தினை மட்டும் அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாக அழித்துகொள்ளவும்.பின்பு வலது புறத்தின் கீழ்பகுதியில் √ இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் இடது புறத்தின் மேல் பகுதியில் <– இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.
Step 3:
அடுத்ததாக Step 3 எடிட்டிங்கிற்கு கீழே உள்ள Tool Optionஐ தொடவும். தொட்டவுடன் கடைசி வரிசையில் இரண்டாவதாக உள்ள Double Exposureஐ தொடவும். தொட்டவுடன் கீழ்பகுதியில் முதலாவதாக உள்ள புகைப்படத்தை சேர்ப்பதற்கான Option ஒன்று இருக்கும் அதை தொட்டவுடன் அது உங்கள் Galleryகு அழைத்துசெல்லும். அங்கு நீங்கள் எடிட் செய்வதற்கு தேவையான Bulb புகைப்படத்தை தேர்வுசெய்யவும்.தேர்வு செய்தபின் அடிப்பகுதியில் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும் அதில் நடுவில் உள்ள ஆப்ஷனை தொடவும். தொட்ட பின்பு அதற்கு மேலே உங்களுக்கு ஆறு ஆப்ஷன்கள் தோன்றும் அதில் நான்காவதாக உள்ள ஆப்சனை தொடவும். தொட்டவுடன் அந்த விளக்கு புகைப்படத்தை நகர்த்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாக பொறுத்திகொள்ளுங்கள் பொறுத்திய பின்பு வலது புறத்தின் கீழ்பகுதியில் √ இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.தொட்டபின் மீண்டும் அடிப்பகுதியில் நடுவிலுள்ள Tools Optionஐ தொடவும். தொட்டபின் கடைசிவரையில் இரண்டாவதாக இருக்கும் Double Exposureஐ தொடவும் தொட்டபின் இந்த பக்கத்தின் கீழ்ப்பகுதியில் முதலாவதாக உள்ள புகைப்படத்தை சேர்ப்பதற்கான ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் உங்களுடைய Galleryகு அழைத்துச் செல்லும் அதில் ஒளிரும் புகைப்படத்தை தேர்வு செய்யவும். தேர்வு செய்தபின் கீழ்ப்பகுதியில் நடுவில் ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தொட்டவுடன் மேலே புதிதாக ஆறு ஆப்ஷன் தோன்றும். அதில் நான்காவதாக உள்ள ஆப்சனை தொடவும் தொட்டபின் கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பது போன்று நகர்த்தி சரியாக பொருத்தி வலது புறத்தின் கீழ்ப்புறத்தில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.
Step 4:
இந்த எடிட்டிங் செயல்முறையில் Step 4 ஒரு எளிமையான முறையாகும். இதற்கு கீழ்ப்பகுதியில் நடுவிலுள்ள Tool ஆப்ஷனை கிளிக் செய்த பின் முதல் வரிசையில் நான்காவதாக உள்ள White Balance ஆப்ஷனை தொடவும்.தொட்டவுடன் முதலில் Temperature ஆப்ஷன் இருக்கும் இதை அதிகரிக்க புகைப்படத்தின் மீது விரலை வைத்து இடப்புறம் இருந்து வலப்புறம் தள்ளவும் இதேபோன்று குறைப்பதற்கு வலப்புறமிருந்து இடப்புறம் தள்ளவும்.பிறகு புகைப்படத்தின் மீது விரலை வைத்து செங்குத்தாக கீழிருந்து மேலாக தள்ளும்போது Tint ஆப்ஷன் தோன்றும்.இந்த Option இரண்டின் அளவுகளையும் கீழே உள்ள அளவுகளில் சரியாக பொருத்திக் கொள்ளவும்.இவற்றை சரியாக பொருத்திய பின்பு வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் இந்த √ குறியீட்டை தொடவும்.
Step 5:
இந்த Step 5ல் இப்பொழுது நாம் எடிட் செய்த புகைப்படத்தை எவ்வாறு Save செய்வது என்று பார்ப்போம். முதலில் கீழ்பகுதியில் EXPORT என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதைத் தொடவும். தொட்டவுடன் இதில் மூன்றாவதாக Export என்ற ஆப்ஷன் இருக்கும் அதை தொட்டவுடன் உங்களுடைய புகைப்படம் உங்களுடைய Gallerல் சேர்ந்து இருக்கும்.
Background & Pngஐ பதிவிரக்கம் செய்யும் முறை:
முதலில் கீழே உள்ள Download Here என்பதை தொடவும் தொட்டவுடன் 30 நிமிடம் காத்திருக்கும் பின் அந்த இடத்தில் Download என்று தோன்றும் அதை தொடவும்.தொட்டவுடன் அது உங்களை Google Driveகு அழைத்து செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான Background Image மற்றும் Pngஐ பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.