Snapseed Best Photo Editing Tamil

Snapseed செயலியை பற்றி ஒரு சுருக்கமான பதிவை பார்ப்போம். இந்த செயலி ஒரு மிகச் சிறந்த போட்டோ எடிட்டிங் செயலியாகும்.இந்த செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு சிறப்பான போட்டோவாக மாற்ற முடியும். இந்த எடிட்டிங் செயலியை அனைவராலும் மிக எளிமையாக பயன்படுத்த முடியும் மட்டம் இந்த செயலியை உலகம் முழுதும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இப்பொழுது இந்த செயலியை பயன்படுத்தி நமது போட்டோவை எவ்வாறு எடிட் செய்வது என்று படிப்படியாக பார்க்கலாம்.

Step 1:

முதலில் Snapseed செயலியை திறக்கவும் திறந்தவுடன் அதில் + இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்யவும். இந்த போட்டோவை தேர்வு செய்யும் நிலையே Snapseed எடிட்டிங்கின் முதல் நிலையாகும்.

Step 2:

நிலை ஒன்றை முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்ற Snapseedன் முக்கியமான எடிட்டிங் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.இங்கு கீழ்புறத்தில் உங்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கும் அதில் இரண்டாவதாக உள்ள TOOLS என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவது வரிசையில் கடைசியாக உள்ள Vintage என்ற ஆப்ஷனை தொடவும்.தொட்டவுடன் கீழ்பகுதியில் வெவ்வேறு வகையான கலர் பில்டர் ஆப்ஷன்கள் தோன்றும் அந்த ஆப்ஷன்களில் மீது விரலை வைத்து வலது புறமிருந்து இடதுபுறமாக தள்ளும்போது அதில் ஒன்பதாவதாக உள்ள கலர் பில்டர் ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் கீழ்ப்பகுதியில் நடுவில் கலர் பில்டர் ஆப்ஷனை அட்ஜஸ்ட் செய்வதற்கான ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அதன் அளவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் போன்று சரியாக வைத்துக் கொள்லவும். அளவுகளை சரியாக வைத்தபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் √ இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வலது புறத்தில் மேல் பகுதியில் முதலாவதாக Edit Stack என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் கீழ்ப்பகுதியில் நான்காவதாக தோன்றும் View Edits என்ற ஆப்ஷனை தொட்டவுடன் வலதுபுறத்தின் கீழ்ப்பகுதியில் Vintage என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்கு கீழ் பகுதியில் <  இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் அதற்கு அருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவிலுள்ள ஆப்ஷனைத் தொடவும்.தொட்டவுடன் இடது புறத்தின் கீழ்பகுதியில் இது × போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதன் அருகில் உள்ள ஆப்ஷனை தொடவும். தொட்ட பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று போட்டோவில் குறிப்பிட்ட நமது உருவத்தை மட்டும் அழித்துக் கொள்ளவும்.அழித்தபின் வலது புறத்தின் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் இடது புறத்தில் மேல் பகுதியில் பின் செல்வதற்கான ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

Step 3:

நிலை மூன்றில் முதலாவதாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று ஆப்ஷன்களில் Tools என்ற ஆப்ஷனை தொட்டவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் கடைசி வரிசையில் இரண்டாவதாக உள்ள Double Exposure ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அதில் முதலாவதாக நமது புகைப்படத்தை சேர்ப்பதற்கான ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த  வண்ணத்துப்பூச்சி இருப்பது போன்ற போட்டோவை தேர்வுசெய்யவும்.தேர்வு செய்தவுடன் கீழ்பகுதியில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவிலுள்ள ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள Add என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் இப்போது நீங்கள் சேர்த்த போட்டோவை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாக நகர்த்தி வைத்துக்கொள்ளுங்கள்.வைத்தபின் வலது புறத்தின் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் மீண்டும் கீழ்ப்பகுதியில் இரண்டாவதாக உள்ள Tools ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் கடைசி வரிசையில் இரண்டாவதாக உள்ள Double Exposure என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அதன் கீழ்ப்பகுதியில் முதலாவதாக போட்டோவை சேர்ப்பதற்கான ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச்செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த வெள்ளி நிறத்தில் புள்ளி புள்ளியாக இருப்பது போன்ற போட்டோவை தேர்வு செய்தவுடன் கீழ்ப்பகுதியில் இரண்டாவதாக உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள Add என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் வலது புறத்தின் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.

தொட்ட பின் வலது புறத்தின் மேல் பகுதியில் முதலாவதாக உள்ள Edit Stock என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் கீழ்ப்பகுதியில் நான்காவதாக தோன்றும் View Edits என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.கிளிக் செய்தபின் வலது புறத்தின் கீழ்பகுதியில் Double Exposure என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்கு அடியில் < இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் அதன் அருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவிலுள்ள ஆப்ஷனை தொடவும்.

தொட்டவுடன் இடத்தின் கீழ் பகுதியில் × இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதன் அருகில் உள்ள ஆப்ஷனை தொடவும். தொட்ட பின் இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் கீழ்நோக்கிய குறியீடு ஒன்று இருக்கும் அதை நான்கு முறை தொடவும். தொட்டப் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று உங்களுடைய போட்டோவிலும் அந்த வெள்ளி நிற புள்ளிகளை சரியாக அழித்து பின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குறியீடை தொடவும்.

Step 4:

நிலை நான்கில் முதலாவதாக கீழே உள்ள ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள Tools என்ற ஆப்ஷனை தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் முதல் வரிசையில் இரண்டாவதாக உள்ள Curves என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று தோன்றும்.இந்த படத்தின் கீழ் பகுதியில் சாய்வாக உள்ள கோட்டினை படத்தில் இருப்பது போன்று சற்று மேல்நோக்கி இருக்குமாறு நகர்த்தி சரியாக பொருத்திக் கொள்ளவும் பொருத்திய பின் உங்களுடைய போட்டோவில் சற்று தங்க நிறமாக மாறி இருக்கும். இவ்வாறு மாறிய பிறகு வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குறியீடை தொடவும்.

Step 5:

இதுவே இந்த போட்டோ எடிட்டிங்கின் கடைசி நிலையாகும்.இந்த நிலையில் நாம் இப்போது எடிட் செய்த போட்டோவை எவ்வாறு Save செய்வது என்று பார்ப்போம். முதலில் கீழ் இப்பகுதியில் மூன்றாவதாக உள்ள EXPORT என்ற ஆப்ஷனை தொடவும் தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் மூன்றாவதாக உள்ள Export என்ற ஆப்ஷனை தொட்டவுடன் நீங்கள் இப்போது எடிட் செய்த உங்களுடைய போட்டோ உங்களுடைய கேலரியில் சேர்ந்திருக்கும்.

DOWNLOAD

Leave a Comment