Snapseed Instagram Trending Photo Editing in Tamil-தமிழ்

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Snapseed செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவை ஒரு சிறப்பான போட்டோவாக அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று ஒரு சிறப்பான போட்டோவாக எவ்வாறு எடிட் செய்வது என்றும் மற்றும் அதை எடிட் செய்வதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்றும் இந்த பதிவில் பார்ப்போம்.

Step 1:

முதலில் Snapseed செயலியை திறக்கவும். திறந்தவுடன் அதில் + இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் Snapseedன் அடுத்த எடிட்டிங் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த போட்டோவை தேர்வுசெய்யும் நிலையே முதல் நிலை ஆகும்.

Step 2:

நிலை ஒன்றை முடித்தவுடன் கீழ் பகுதியில் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும் அதில் இரண்டாவதாக உள்ள TOOLS என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் ஐந்தாவது வரிசையில் நான்காவதாக இருக்கும் Black & White என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் நான்காவதாக இருக்கும் Dark என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் அதில் Brightnessஐ சற்று குறைத்து -20 வைத்தபின் வலது புறத்தின் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்த பின் வலது புறத்தில் மேல் பகுதியில் முதலாவதாக இருக்கும் Edit Stack என்ற ஆப்ஷனை தொட்டவுடன் அதற்குக் கீழ் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள View Edits என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் வலதுபுற கீழ்ப்பகுதியில் Black & White என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்கு அடிப்பகுதியில் < இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் அதற்கு அருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் இடது புறத்தில் கீழ் பகுதியில் × இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதற்கு அருகிலுள்ள ஆப்ஷனை தொடவும்.

தொட்டவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று குறிப்பிட்ட நமது கை கால் முகம் அதாவது தோல் தெரியும் இடத்தினை மட்டும் அழித்துக் கொள்ளவும்.

இவ்வாறு சரியாக அழித்தபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் √ இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் இடது புறத்தின் மேல் பகுதியில் பின் நோக்கி செல்வதற்கான ஒரு குறியீடு இருக்கும் அதைத் தொடவும்.


Step 3:

நிலை மூன்றில் முதலாவதாக கீழ்ப்பகுதியில் உள்ள மூன்று ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள TOOLS என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் கடைசி வரிசையில் இரண்டாவதாக உள்ள Double Exposure என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அதில் முதலாவதாக போட்டோவை சேர்ப்பதற்கான ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தொட்டவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்து செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த இன்ஸ்டாகிராம் இருப்பதுபோன்ற போட்டோவை தேர்வு செய்யவும்.

தேர்வு செய்தபின் கீழ்பகுதியில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவிலுள்ள ஆப்ஷனை தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள Add என்ற ஆப்ஷனை தொட்டவுடன் நாம் இப்போது சேர்த்த அந்த போட்டோவை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாக நகர்த்தி பொருத்திக் கொள்ளவும்.

இதுபோன்று பொருத்திய பின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குறியீட்டை தொடவும்.தொட்டவுடன் வலது புறத்தின் மேல் பகுதியில் முதலாவதாக உள்ள Edit Stock என்ற ஆப்சனை தொட்டவுடன் அதற்குக் கீழ் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள View Edits என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டபின் கீழ்ப்பகுதியில் Double Exposure என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்கு அடியில் < இது போன்ற ஒரு குறியீடு இருக்கும். அதை தொட்டவுடன் அதன் அருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவில் உள்ள ஆப்ஷனை தொடவும் தொட்டவுடன் இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் × இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதற்கு அருகிலுள்ள ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் இடது புறத்தில் கீழ் பகுதியில் கீழ்நோக்கிய குறியீடு ஒன்று இருக்கும் அதை நான்கு முறை தொட்டபின் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாக அளித்து கொள்ளவும்.

இவ்வாறு சரியாக அழித்தபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் √ இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் இடது புறத்தின் மேல் பகுதியில் பின் நோக்கி செல்வதற்கான ஒரு குறியீடு இருக்கும் அதைத் தொடவும்.

மீண்டும் இதே போன்று Double Exposure என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் முதலில் வரும் போட்டோவை சேர்ப்பதற்கான ஆப்ஷனை தொட்டவுடன் உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த வண்ணத்துப்பூச்சி இருப்பது போன்ற போட்டோவை தேர்வுசெய்யவும். தேர்வு செய்தவுடன் கீழ்பகுதியில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவில் உள்ள ஆப்ஷனை தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள Lighten என்ற ஆப்ஷனை தொட்டபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குறியீட்டை தொடவும்.

Step 4:

நிலை மூன்றை முடித்தவுடன் கீழே உள்ள மூன்று ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள TOOLS ஆப்ஷனை தொட்டவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் முதல் வரிசையில் நான்காவதாக உள்ள White Balance என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அதில் முதலாவதாக Temprature என்ற ஆப்ஷன் இருக்கும் மற்றும் போட்டோவின் மீது விரலை வைத்து கீழிருந்து மேலாக தள்ளும்போது Tint என்ற மற்றொரு ஆப்ஷனும் வரும் இதன் அளவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் போன்று சரியாக வைத்துக் கொள்ளவும்.

Temperature = -80

Tint = -50

இந்த அளவுகளை சரியாக வைத்த பின் இடது புறத்தில் கீழ்ப்பகுதியில் ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் வலது பக்கத்தின் மேல் பகுதியில் மூன்று ஆப்ஷன்களில் முதலாவதாக உள்ள Edit Stack என்ற ஆப்ஷனை தொட்டவுடன் அதற்குக் கீழ் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள View Edits என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் White Balance என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்கு அடிப்பகுதியில் < இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் அதன் அருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவில் உள்ள ஆப்ஷனை தொட்டவுடன் இடது புறத்தின் கீழ் பகுதியில் × இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதன் அருகில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்த பின் இடது புறத்தில் கீழ் பகுதியில் கீழ்நோக்கிய குறியீடு ஒன்று இருக்கும் அதனை மூன்று முறை தொட்டவுடன் அதன் அளவு 25 என மாறிவிடும். மாறிய பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று உங்களுடைய போட்டோவில் நாம் முன்னதாகவே அழித்த கை கால் முகம் அதாவது தோல் தெரியும் இடத்தை மட்டும் சரியாக அழித்துக் கொள்ளவும்.

இவ்வாறு சரியாக அழித்தபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் √ இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் இடது புறத்தின் மேல் பகுதியில் பின் நோக்கி செல்வதற்கான ஒரு குறியீடு இருக்கும் அதைத் தொடவும்.

Step 5:

இதுவே இந்த போட்டோ எடிட்டிங்கின் கடைசி நிலையாகும்.இந்த நிலையில் நாம் இப்போது எடிட் செய்த போட்டோவை எவ்வாறு Save செய்வது என்று பார்ப்போம். முதலில் கீழ் இப்பகுதியில் மூன்றாவதாக உள்ள EXPORT என்ற ஆப்ஷனை தொடவும் தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் மூன்றாவதாக உள்ள Export என்ற ஆப்ஷனை தொட்டவுடன் நீங்கள் இப்போது எடிட் செய்த உங்களுடைய போட்டோ உங்களுடைய கேலரியில் சேர்ந்திருக்கும்.

Background & Pngஐ பதிவிரக்கம் செய்யும் முறை:

முதலில் கீழே உள்ள Download Here என்பதை தொடவும் தொட்டவுடன் 30 நிமிடம் காத்திருக்கும் பின் அந்த இடத்தில் Download என்று தோன்றும் அதை தொடவும்.தொட்டவுடன் அது உங்களை Google Driveகு அழைத்து செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான Background Image மற்றும் Pngஐ பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.

Download Now

5 thoughts on “Snapseed Instagram Trending Photo Editing in Tamil-தமிழ்”

Leave a Comment