Snapseed Fire Heart Photo Editing in Tamil-தமிழ்

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Snapseed செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று ஒரு சிறப்பான போட்டோவாக எவ்வாறு எடிட் செய்வது என்றும் மற்றும் அதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்றும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Snapseed செயலி நமது போட்டோவை எடிட் செய்வதற்கான ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் செயலி ஆகும். இந்த போட்டோ எடிட்டிங் செயலியை பயன்படுத்தி நமது போட்டோவை எளிமையான முறையில் எடிட் செய்ய முடியும். இதனை உலகம் முழுதும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இப்பொழுது நமது போட்டோவை எவ்வாறு எடிட் செய்வது என்று படிநிலை படிநிலையாக பார்க்கலாம் மற்றும் அதற்கு தேவையான Background & Pngஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது அதனை பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Step 1:

முதலில் Snapseed செயலியை திறக்கவும் திறந்தவுடன் அதில் + இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போட்டோவை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் Snapseedன் அனைத்து Toolம் காணப்படும் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

Step 2:

போட்டோவை தேர்வு செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று இருக்கும்

இதில் கீழ் பகுதியில் இரண்டாவதாக உள்ள Tools என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவது வரிசையில் நான்காவதாக உள்ள Vintage என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அதில் வெவ்வேறு வகையான கலர் பில்டர் ஆப்ஷன்கள் இருக்கும். அந்த ஆப்ஷன்களில் மீது விரலை வைத்து வலது புறம் இருந்து இடது புறமாக தள்ளும்போது வெவ்வேறு வகையான ஆப்ஷன்களை பார்க்க முடியும் இதில் கடைசியாக உள்ள ஆப்ஷனை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று இருக்கும்.

இதில் நடுப்பகுதியில் கலர் பில்டரை Adjust செய்வதற்கான ஆப்ஷன் ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அதில் நான்கு ஆப்ஷன்கள் தோன்றும் அதில் இரண்டாவதாக உள்ள Saturation என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அதன் அளவை முற்றிலுமாக குறைத்து -100ல் வைத்தபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் √ இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் வலதுபுறத்தில் மேல்பகுதியில் முதலாவதாக உள்ள Edit Stack என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தவுடன் கீழ்ப்புறத்தில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள View Edits என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் வலது புரத்தின் கீழ் பகுதியில் Vintage என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதற்குக் கீழ் பகுதியில் < இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அதற்கு அருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவில் உள்ள ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் இடது புறத்தில் கீழ்பகுதியில் × இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதன் அருகிலுள்ள ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று முகம் கை கால் அதாவது தோல் தெரியும் இடத்தினை மட்டும் அழித்து கொள்ளவும்.

அழித்தபின் வலது புறத்தில் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் இடது புறத்தின் மேல் பகுதியில் <– இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.

Step 3:

நிலை இரண்டை முடித்தவுடன் கீழே உள்ள Tools ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் கடைசி வரிசையில் இரண்டாவதாக உள்ள Double Exposure ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் கீழ்பகுதியில் முதலாவதாக போட்டோவை சேர்ப்பதற்கான ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச்செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்ற போட்டோவை தேர்வு செய்யவும்.

தேர்வு செய்தவுடன் கீழ் பகுதியில் மூன்று ஆப்ஷன்கள் தோன்றும் அதில் நடுப்பகுதியில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள Add ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் அந்த போட்டோவை நகர்த்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாகப் வைத்து கொள்ளவும்.

வைத்தபின் வலது புறத்தில் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். மீண்டும் அதே போன்று கீழ்ப்பகுதியில் உள்ள Tools ஆப்ஷனை தொடவும் தொட்டவுடன் கடைசி வரிசையில் இரண்டாவதாக உள்ள Dobule Exposure ஆப்ஷனை தொடவும். தொட்டபின் முதலில் போட்டோவை சேர்ப்பதற்கான ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தொட்டவுடன் உங்களை கேலரிக்கு அழைத்துச்செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த நெருப்பு துகள்கள் இருப்பது போன்ற போட்டோவை தேர்வு செய்யவும்.

தேர்வு செய்து உடன் கீழ்ப்பகுதியில் உள்ள மூன்று ஆப்ஷன்களில் நடுவில் உள்ள ஆப்ஷனை தொட்டவுடன் மேல் பகுதியில் தோன்றும் நான்காவதாக உள்ள Add ஆப்ஷனை தொடவும். தொட்டபின் வலது புறத்தின் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் வலதுபுறத்தில் மேல்பகுதியில் முதலாவதாக உள்ள Edit Stack என்ற ஆப்ஷனை தொட்டவுடன் கீழ்ப்பகுதியில் நான்காவதாக தோன்றும் View Edits ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் வலதுபுறத்தில் மேல்பகுதியில் Dobule Exposure என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்கு கீழ் பகுதியில் < இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் அதனருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவில் உள்ள ஆப்ஷனை தொடவும்.

தொட்டவுடன் இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் × இதுபோன்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதன் அருகிலுள்ள ஆப்ஷனை தொட்டவுடன் இடது புறத்தில் கீழ்பகுதியில் கீழ்நோக்கிய குறியீடு ஒன்று இருக்கும் அதை நான்குமுறை தொடவும். தொட்டபின் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று நமது போட்டோவில் குறிப்பிட்ட நமது உருவத்தில் உள்ள அந்த சிவப்பு நிறத்தை அழித்துக் கொள்ளவும்.

அழித்தபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குறியீட்டை தொட்டவுடன் இடது புறத்தில் மேல் பகுதியில் பின் செல்வதற்கான ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.

Step 4:

முதலில் கீழ்பகுதியில் இரண்டாவதாக உள்ள Tools ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் முதல் வரிசையில் நான்காவதாக உள்ள White Balance ஆப்ஷனை தொடவும்.தொட்டவுடன் அதில் வரும் ஆப்ஷன்களின் அளவுகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் போன்று சரியாக வைத்துக் கொள்ளவும்

Temperature = 34

Tint = 24

அளவுகளை சரியாக வைத்தபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குறியீடை தொடவவும். தொட்டவுடன் வலதுபுறத்தில் மேல்பகுதியில் முதலாவதாக உள்ள Edit Stack என்ற ஆப்சனை தொட்டவுடன் அதற்கு கீழ்ப்பகுதியில் நான்காவதாக தோன்றும் View Edits என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் வலதுபுறத்தில் மேல்பகுதியில் White Balance என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்கு கீழ் பகுதியில் < இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் அதற்கு அருகில் தோன்றும் 3 ஆப்ஷன்களில் நடுவிலுள்ள ஆப்ஷனை தொடவும்.

தொட்டவுடன் இடது புறத்தில் கீழ் பகுதியில் × இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதன் அருகில் உள்ள ஆப்ஷனை தொடவும்.தொட்டவுடன் இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் கீழ் நோக்கி குறியீடு ஒன்று இருக்கும் அதை மூன்றுமுறை தொட்டபின் நமது போட்டோவில் குறிப்பிட்ட நமது கை கால் முகம் அதாவது தோல் தெரியும் இடத்தினை மட்டும் அழித்துக் கொள்ளவும். அழித்தபின் வலது புறத்தின் கீழ் பகுதியில் உள்ள குறியீடை தொட்டபின் இடது புறத்தில் மேல் பகுதியில் பின் செல்வதற்கான ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.

Step 5:

நிலை ஐந்தில் நாம் இப்போது எடிட் செய்த போட்டோவினை எவ்வாறு Save செய்வது என்று பார்ப்போம். இதற்கு முதலில் வலது புறத்தின் கீழ் பகுதியில் EXPORT என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் கீழே பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் மூன்றாவதாக உள்ள Export என்ற ஆப்ஷனை தொடவும் தொட்டவுடன் உங்களுடைய போட்டோ உங்களுடைய கேலரியில் சேர்ந்து இருக்கும்.

Download Now

Leave a Comment