How to Use Snapseed App in Tamil-தமிழ்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Snapseed செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை எவ்வாறு எளிமையான முறையில் எடிட் செய்வது மற்றும் Snapseed செயலியை எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்றும் பார்ப்போம்.

இந்த Snapseed எடிட்டிங் செயலி இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த புகைப்பட எடிட்டிங் செயலி ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை ஒரு சிறந்த புகைபடமாக மாற்ற முடியும். அதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும்.முதலில் இந்த Snapseed செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து அனைவரும் முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்த பின் முதலில் Snapseed செயலியை திறக்கவும் திறந்தவுடன் அதில் + போன்ற ஒரு குறியீடு காணப்படும். அதை தொட்டவும் தொட்டவுடன் அது உங்களை Galleryகு அழைத்துச் செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யவும்.தேர்வு செய்தபின் Snapseed  செயலியின் எடிட்டிங் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படுவது போல் இருக்கும்.

இதில் கீழ் பகுதியில் LOOKS,TOOLS,EXPORT என மூன்று அமைப்புகள் காணப்படும். அதில் இரண்டாவதாக உள்ள TOOLS அமைப்பை தொடவும். தொட்டவுடன் புகைப்படத்தை எடிட் செய்ய தேவையான அனைத்து TOOLம் இங்கு காணப்படும். இந்த TOOLSஐ எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.

Tune Image

இந்த Tune Imageஐ பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தின் Brightness, Contrast,Saturation,Ambiance,Highlights, Shadows,Warmth ஆகியவற்றை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும். இந்த அமைப்புகளை அதிகரிப்பது மற்றும் குறைப்பது ஆகியவற்றை பயன்படுத்தி நமது புகைப்படத்தில் ஒரு சில வண்ணங்களை மாற்ற முடியும்.

Details

இந்த Details Toolஐ பயன்படுத்தி நம்முடைய இயல்பான புகைப்படத்தை ஒரு தெளிவான புகைப்படமாக மாற்ற முடியும்.இதில் Structure மற்றும் Sharpening என இரண்டு Tool இருக்கும்.

Curves

இந்த Toolஐ பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தில் சிவப்பு,மஞ்சள்,பச்சை கருப்பு,நீலம்,ஊதா இது போன்ற வண்ணங்களை மாற்ற முடியும். மற்றும் இது போன்ற நிறங்களை நமக்கு தேவையான அளவுகளில் வைத்துக் கொள்ளலாம்.

Crop

இந்த Crop Toolன் முக்கியமான பயன்பாடு நமது புகைப்படத்தை தேவையான அளவுகளில் வெட்டுவதற்கு இது உதவுகிறது.

Rotate

இந்த Toolஐ பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தினை கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் சுழற்றி நமக்குத் தேவையான திசைகளில் பொருத்துவதற்கு இது உதவுகிறது.

Perspective

Perspective Toolஐ பயன்படுத்தி நமது புகைப்படத்தில் பார்க்கும் திசைகளை மாற்றுவதற்கு இது உதவுகிறது. அதாவது நமது புகைப்படத்தின் திசைகளை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மற்றும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் மாற்றுவதற்கு இது உதவுகிறது.

Expand

இந்த Toolஐ பயன்படுத்தி நமது புகைப்படத்தை பெரிது படுத்தும் போது அதற்கு இடையில் தோன்றும் இடைவெளிகளை தானாக பொருத்தி கொள்கிறது. இதுவே இந்த Expand Toolன் பயன்பாடு ஆகும்.

Selective

இந்த Toolஐ பயன்படுத்தி புகைப்படத்தில் நமக்கு தேவையான இடங்களில் கிளிக் செய்து Brightnessஐ அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும்.

Glamour Glow

Glamour Glow Toolல் ஐந்து வகையான புகைப்பட எடிட்டிங் மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உங்களுக்கு தேவையான எடிட்டிங் மாதிரியை கிளிக் செய்தவுடன் உங்கள் புகைப்படத்தில் அது சேர்ந்துவிடும்.

Drama

இதில் ஆறு வகையான கலர் பில்டர் அமைப்புகள் உள்ளது. இந்த கலர் பில்டர்களை உங்களுக்குத் தேவையான புகைப்படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Vintage

Vintage Tool வெவ்வேறு வகையான 12 கலர் பில்டர்களை கொண்டது. இதில் உங்களுக்கு தேவையான கலர் பில்டர்களை தேர்வு செய்து அந்த வண்ணத்தை உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

Noir

இதில் 14 வகையான கருப்பு நிற கலர் பில்டர்கள் இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான கலரை தேர்வு செய்து அதை உங்களுக்கு பிடித்ததை போன்று மாற்றி உங்களுடைய புகைப்படத்தை எடிட் செய்து கொள்ளலாம்.

Portrait

Portrait Toolஐ பயன்படுத்தி புகைப்படத்தில் உள்ள நமது சருமத்தினை மென்மையாக மாற்றுவதற்கு இது உதவுகிறது. மற்றும் இதில் ஒரு சில எடிட்டிங் Option உள்ளது.

Head Pose

இந்த Head Pose Toolஐ பயன்படுத்தி முகத்தில் அசைவுகளை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் முகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.இந்த Toolஐ குறிப்பாக இதற்காக மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

Lens Blur

Lens Blurஐ பயன்படுத்தி புகைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தெளிவாக தெரியும்படியும் மற்ற பகுதியை மங்கலாகவும் மாற்றி ஒரு சிறப்பான புகைப்படத்தை எடிட் செய்ய முடியும்.

Vignette

இந்த Toolஐ பயன்படுத்தி புகைப்படத்தின் நடுபுறத்தை சாதாரணமாகவும் புகைப்படத்தின் வெளிப்புற ஓரத்தில் கருப்பு நிற நிழல் இருப்பது போன்றும் எடிட் செய்ய முடியும்.

Double Exposure

Double Exposure Toolஐ பயன்படுத்தி நாம் எடிட் செய்ய தேவையான அடுத்தடுத்த புகைப்படம் மற்றும் Pngஐ சேர்க்க இது பெரிதும் உதவுகிறது.

Text

இந்த Text Toolஐ பயன்படுத்தி புகைப்படத்தில் நமக்கு தேவையான தமிழ்,ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை சேர்க்க முடியும்.

Frames

இதில் வெவ்வேறு விதமான Frame மாதிரிகள் இருக்கும். உங்களுக்கு தேவையான Frameஐ Click செய்து நமது புகைப்படத்தில் சேர்த்து கொள்ளலாம்.

Snapseed Appஐ பதிவிரக்கம் செய்யும் முறை:

முதலில் கீழே உள்ள Download Here என்பதை  தொட்டவுடன் அடுத்ததாக உங்களுக்கு தேவையான Snapseed செயலியை பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.

> Snapseed App link : Download

6 thoughts on “How to Use Snapseed App in Tamil-தமிழ்”

Leave a Comment