How To Use PicsArt App in Tamil-தமிழ்

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த தொகுப்பில் PicsArt Appல் எவ்வாறு போட்டோவை Edit செய்வது மற்றும் PicsArt Appஐ எப்படி Download செய்வது என்று பார்க்கலாம்.

PicsArt App மொபைல் போன்களிலே மிக சிறந்த ஒரு போட்டோ எடிட்டிங் App ஆகும். இந்த Appபினை பயன்படுத்தி நமது போட்டோவை ஒரு சிறந்த போட்டோவாக எடிட்டிங் செய்ய முடியும்.

இந்த PicsArt App கணினியில் உள்ள Photoshop Softwareகு நிகரான ஒரு மோபைல் போட்டோ எடிட்டிங் App ஆகும். இந்த PicsArtஐ பயன்படுத்தி நமது போட்டோவை பல்வேறு வகையான முறையில் நமக்கு பிடித்த மாதிரி எடிட்டிங் செய்யலாம்.

மற்றும் இந்த PicsArt Appஐ பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறை ஆகும். இப்போது இந்த PicsArt Appஐ எவ்வாறு பயன்படுத்துவது என்று விரிவாக பார்ப்போம்.

முதலில் PicsArt Appஐ Download செய்ய தேவையான Link மற்றும் அதை எவ்வாறு Download செய்வது என்பதற்கான குறிப்புகள் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதை பார்த்து Download & Install செய்து கொள்ளுங்கள்.

PicsArt Appஐ Install செய்த பின் Appஐ திறக்கவும் திறந்த உடன் கீழே நடுவில் உங்களுக்கு + போன்ற ஒரு குறியீடு ரோஸ் நிறத்தில் இருக்கும் அதை தொடவும்.

தொட்டவுடன் கீழே படத்தில் காண்பிக்க பட்டபடி ஒரு பக்கம் தோன்றும். அதில் முதலில் உள்ள Edit a Photo என்ற Optionஐ தொடவும்.தொட்டவுடன் உங்களுடைய Galleryகு அழைத்து செல்லும். அதில் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்யும்.

தேர்வு செய்த பின் PicsArtன் எடிட்டிங் பக்கத்திற்கு செல்லும். இதுவே PicsArtன் அனைத்து வகையான எடிட்டிங் Toolகளும் காணப்படும் ஒரு பக்கம் ஆகும்.இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் எடிட்டிங் செய்ய தேவையான 

Gold,Tools,Effect,Retouch,Sticker,Cutout, Reply,Text,Add Photo,Fit,Brushes, Border,Mask,Draw,Lens Blur,Shape Mask,Frame,Call Out 

இது போன்ற பல வகையான எடிட்டிங் Tools அங்கு காணப்படும். இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

Goldன் பயன்பாடு:

பொதுவாக இந்த Gold எடிட்டிங் Toolஐ யாரும் அதிக அளவில் பயன்படுத்துவது இல்லை. இருப்பினும் இதை பயன்படுத்தி புகைப்படத்தின் ஒரு சில வண்ணங்களை மாற்ற முடியும்.

Toolsன் பயன்பாடு:

PicsArt Appல் அதிக தொகுப்புகளை கொண்டு ஒரு Tool அமைப்பு ஆகும்.இதை Toolஐ பயன்படுத்தி புகைப்படத்தை நமக்கு தேவையான அளவுகளில் வெட்டுதல்,புகைப்படத்தில் தேவையில்லாத பகுதியை அளித்தல்.

புகைப்படத்தில் நிறங்களை நமக்கு தேவையான அளவு குறைபது அதிகரிப்பது,புகைப்படத்தின்  அளவுகளில் தேவையான மாற்றம் செய்வது,புகைப்படத்தை சுழற்று நமக்கு தேவையான மாதிரி அமைப்பது மற்றும் இது போன்ற பல வகையான பயன்பாடுகள் உள்ளது.

Effectன் பயன்பாடு:

Effect Toolஐ பயன்படுத்தி புகைப்படத்தின் Colour Filterகளை மாற்ற முடியும்.புகைப்படத்தில் நமக்கு பிடித்த Effectகளை சேர்கலாம்.புகைப்படத்தின் வெளிப்புற ஓரங்களில் வரிகளை வரவைப்பது,புகைப்படத்தை கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மாற்றுவது, புகைப்படத்தை மங்கலாக மாற்றுவது இது போன்ற பல்வேறு வகையின் இந்த Effect Toolஐ பயன்படுத்தலாம்.

Retouchன் பயன்பாடு:

இந்த Retouchனை பயன்படுத்தி நம்முடைய முகத்தில் உள்ள கண் காது மூக்கு மற்றும் உதடு ஆகியவற்றை அழகுபடுத்த முடியும். அதுமட்டுமின்றி இந்த Retouchஜ பயன்படுத்தி நமது முகத்தின் நிறங்களை மாற்ற முடியும்.

Stickerன் பயன்பாடு:

இந்த Sticker பயன்படுத்தி நமது போட்டோவை அழகுபடுத்த முடியும். அதுமட்டுமின்றி இந்த Sticker அமைப்பில் அனைத்து வகையான Stickerகளும் இங்கு இருக்கும் உங்களுக்கு எது வேண்டுமோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Cutoutன் பயன்பாடு:

இந்த Cutout Toolஐ பயன்படுத்தி புகைப்படத்தில் நமக்கு தேவையான குறிப்பிட்ட பகுதியை வெட்டலாம். இந்தப் புகைப்படத்தை வெட்டும்முறை மிகவும் எளிமையானது ஆகும்.

Replyன் பயன்பாடு:

இந்த Reply Toolல் பல்வேறு வகையான புகைப்பட எடிட்டிங் மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதை போன்று உங்களுக்கு பிடித்த புகைப்படத்தையும் எளிமையான முறையில் எடிட் செய்து கொள்ளலாம்.

Add Photoன் பயன்பாடு:

இந்த Add Photo Toolஐ பயன்படுத்தி நாம் எடிட் செய்யத் தேவையான அடுத்தடுத்த போட்டோக்களை சேர்க்க இது உதவுகிறது.

Brushesன் பயன்பாடு:

Brushes Toolல்  வெவ்வேறு வடிவங்களைக் கொண்ட Brushesகல் இதில் இருக்கும் இதனை பயன்படுத்தி நமது புகைப்படங்களில் தேவையான இடங்களில் தேவையான வடிவங்களை கொண்டு வரைந்து கொள்ளலாம்

Borderன் பயன்பாடு:

Border Toolஐ பயன்படுத்தி நமது புகைப்படத்தின் வெளிப்புறத்தில் ஒரு வழியினை ஏற்படுத்த முடியும்.அந்த வரியின் வண்ணத்தையும் மாற்ற முடியும்.

Maskன் பயன்பாடு:

இந்த Mask Toolல் Defaultஆக வெவ்வேறு வகையான புகைப்பட மாதிரிகள் இருக்கும் இதில் உங்களுக்கு தேவையான புகைப்பட மாதிரிகளை நம்முடைய புகைப்படத்தில் பொருத்திக் கொள்ளலாம்.

Drawன் பயன்பாடு:

இந்த Toolல் Draw மற்றும் Colour என இரண்டு வகையான Option இருக்கும். இதனைப் பயன்படுத்தி நமது புகைப்படத்தில் தேவையான கோடுகள் மற்றும் தேவையான படங்களை வரைந்து கொள்ளலாம்.

Frameன் பயன்பாடு:

இதில் வெவ்வேறு வகையான Frame மாதிரிகள் இருக்கும் இதில் உங்களுக்கு தேவையான Frame மாதிரிகளை நமது புகைப்படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Lens Flare பயன்பாடு:

இந்த Lens Flareல் சூரிய ஒளி கண்ணாடியின் மீது பட்டுத் தெறிக்கும் போது ஏற்படும் அமைப்பை வெவ்வேறு வண்ணங்களில் வெவ்வேறு கோணங்கள் மற்றும் வெவ்வேறு அமைப்புகளில் இதில் இருக்கும். இதனை தேவையான இடங்களில் நமது போட்டோக்களில் பயன்படுத்தி ஒரு சிறப்பான போட்டோவாக மாற்ற முடியும்.

Shape Maskன் பயன்பாடு:

இந்த Shape Maskல் வெவ்வேறு வடிவங்களில் ஆன பிரேம்கள் போன்ற அமைப்புகள் இருக்கும் இந்தப் பிரேம்களின் அமைப்புகளை முதலில் நம் போட்டோவை சேர்த்த பிறகு அதன் மீது நமக்கு தேவையான பிரேம்களை சேர்த்து ஒரு சிறப்பான போட்டோவாக எடிட் செய்ய இது உதவுகிறது. அதுமட்டுமின்றி அந்த பிரேம்களில் அடர்த்தியை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும்.

Calloutன் பயன்பாடு:

இந்த ஆப்ஷனில் வெவ்வேறு வகையான ஸ்டிக்கர் அமைப்புகள் இருக்கும் இந்த ஸ்டிக்கர் அமைப்புகளை நமது போட்டோக்களை சேர்த்த பிறகு நமக்கு தேவையான ஸ்டிக்கர்களை Add செய்து அதில் நமக்கு தேவையான வார்த்தைகளை எழுதிக் கொள்ளலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள Toolகளின் பயன்பாடுகளை சற்று கற்றுக்கொண்ட பிறகு நீங்களும் PicsArt செயலியை பயன்படுத்தி உங்களுடைய ஒரு சாதாரண போட்டோவை சிறப்பான போட்டோவாக எடிட் செய்ய முடியும். இந்த செயலியை பயன்படுத்துவது மிக மிக எளிமையான முறையாகும். இந்த செயலியை முதலில் பயன்படுத்துவது சற்று கடினமாக இருந்தாலும் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது நீங்கள் அதில் உள்ள Toolகளின் பயன்பாடுகளை மிக எளிதாக கற்றுக் கொள்ளலாம் பிறகு இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் சுலபம் ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி போட்டோவை நமக்கு தேவையான அனைத்து வகையான மாதிரிகளிலும் எடிட் செய்ய முடியும்.

Download Now

1 thought on “How To Use PicsArt App in Tamil-தமிழ்”

Leave a Comment