Instagram viral ring light photo editing, snapseed best photo editing, photo editing tamil EH

Snapseed செயலி ஒரு மிகச் சிறந்த போட்டோ எடிட்டிங் செயலி ஆகும். இதனை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும். இப்பொழுது மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று நம்முடைய போட்டோவையும் எவ்வாறு எளிமையாக எடிட் செய்வது என்று படிப்படியாக பார்க்கலாம்.

Step 1:

முதலில் Snapseed செயலியை திறக்கவும். திறந்தவுடன் அதில் + இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் இந்த போட்டோவ எடிட் செய்வதற்கு தேவையான Background போட்டோவை கீழே சென்று பதிவிறக்கம் செய்த பின் அதனை தேர்வு செய்து கொள்ளவும். தேர்வு செய்தவுடன் Snapseedன் அடுத்த எடிட்டிங் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த போட்டோவை தேர்வுசெய்யும் நிலையே முதல் நிலை ஆகும்.

Step 2:

நிலை ஒன்றை முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்ற Snapseedன் முக்கியமான எடிட்டிங் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு கீழ்புறத்தில் உங்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கும் அதில் இரண்டாவதாக உள்ள TOOLS என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் கடைசி வரிசையில் இரண்டாவதாக உள்ள Dobule Exposure என்ற ஆப்ஷனை தொட்டவுடன் கீழ்பகுதியில் முதலாவதாக தோன்றும் போட்டோவை சேர்ப்பதற்கான ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச்செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று உங்களுடைய போட்டோவையும் சரியாக நகர்த்தி பொருத்திக் கொள்ளுங்கள்.

பொருத்திய பின் கீழ்பகுதியில் மூன்றாவதாக உள்ள ஆப்ஷனை தொட்டவுடன் அதன் அளவை முற்றிலுமாக அதிகரித்துக் கொள்ளவும் அதிகரித்த பின் கீழ் பகுதியில் இதுபோன்ற ஒரு √ குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும்.கிளிக் செய்தவுடன் வலது புறத்தில் மேல் பகுதியில் முதலாவதாக Edit Stack என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் கீழ்ப்பகுதியில் நான்காவதாக தோன்றும் View Edits என்ற ஆப்ஷனை தொட்டவுடன் வலதுபுறத்தின் கீழ்ப்பகுதியில் Double Exposure என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்கு கீழ் பகுதியில் <  இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் அதற்கு அருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவிலுள்ள ஆப்ஷனைத் தொடவும்.தொட்டவுடன் இடது புறத்தின் கீழ்பகுதியில் இது × போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதன் அருகில் உள்ள ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாக அழித்து கொள்ளவும்.

அழித்தபின் வலதுபுறத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குறியீட்டை தொட்டவுடன் இடது புறத்தில் மேல் பகுதியில் இதுபோன்ற <– ஒரு குறியீடு தோன்றும் அதை தொடவும்.

Step 3:

நிலை மூன்றில் கீழ்ப்பகுதியில் இரண்டாவதாக உள்ள Tools என்ற ஆப்ஷனை தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் மூன்றாவது வரிசையில் முதலாவதாக உள்ள Selective என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் உங்களுடைய போட்டோவில் தோல் தெரியும் இடத்தின் மீது கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் உங்களுடைய இரண்டு விரலை வைத்து நகர்த்தும் போது ஒரு வட்டம் ஏற்படும் அதனை நீங்கள் உங்களுக்கு தேவையான அளவில் பொருத்திய பின்பு உங்களுக்கு தேவையான Brightnessஐ அதிகரித்துக்கொள்ளலாம். இதேபோன்று உங்களுடைய போட்டோவில் தோல் தெரியும் இடத்தில் உங்களுக்கு தேவையான அளவில் Brightnessஐ அதிகரித்துக் கொள்ளலாம். அதிகரித்த பின் வலது புறத்தின் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.

Step 4:

இந்த நிலை நான்கில் முதலாவதாக கீழே உள்ள மூன்று ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள Tools என்ற ஆப்ஷனை தொடவும் தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் முதலாவது வரிசையில் நான்காவதாக உள்ள White Balance என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் முதலில் Temprature என்ற ஆப்ஷனும் அடுத்ததாக உங்கள் விரலை வைத்து மேல் நோக்கி தள்ளும் பொழுது Tint என்ற ஆப்ஷனும் இருக்கும் இதன் அளவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் போன்று சரியாக வைத்துக் கொள்ளவும்.

Temperature = 20

Tint = 0

இந்த அளவுகளை சரியாக வைத்தபின் வலது புறத்தின் கேள்வி பகுதியிலுள்ள குறியீட்டை தொடவும்.

Step 5:

அனைத்து எடிட்டிங் செய்யும் முடித்தவுடன் நமது போட்டோவை save செய்ய கீழ்ப்புறத்தில் உள்ள மூன்று ஆப்ஷன்களில் கடைசியாக உள்ள EXPORT என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் மூன்றாவதாக உள்ள Export என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் நீங்கள் எடிட் செய்த உங்களுடைய போட்டோ உங்களுடைய கேலரியில் சேர்ந்திருக்கும்.

Background & Pngஐ பதிவிரக்கம் செய்யும் முறை:

முதலில் கீழே உள்ள Download Here என்பதை தொடவும் தொட்டவுடன் 20 நிமிடம் காத்திருக்கும் பின் அந்த இடத்தில் Download என்று தோன்றும் அதை தொடவும்.தொட்டவுடன் அது உங்களை Google Driveகு அழைத்து செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான Background Image மற்றும் Pngஐ பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.

DOWNLOAD

Leave a Comment