இந்த Snapseed எடிட்டிங் செயலி இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த புகைப்பட எடிட்டிங் செயலி ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை ஒரு சிறந்த புகைபடமாக மாற்ற முடியும். அதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும்.முதலில் இந்த Snapseed செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து அனைவரும் முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.பதிவிறக்கம் செய்த பின் முதலில் Snapseed செயலியை திறக்கவும் திறந்தவுடன் அதில் + போன்ற ஒரு குறியீடு காணப்படும். அதை தொட்டவும் தொட்டவுடன் அது உங்களை Galleryகு அழைத்துச் செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யவும்.தேர்வு செய்தபின் Snapseed செயலியின் எடிட்டிங் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படுவது போல் இருக்கும்.இதில் கீழ் பகுதியில் LOOKS,TOOLS,EXPORT என மூன்று அமைப்புகள் காணப்படும். அதில் இரண்டாவதாக உள்ள TOOLS அமைப்பை தொடவும். தொட்டவுடன் புகைப்படத்தை எடிட் செய்ய தேவையான அனைத்து TOOLம் இங்கு காணப்படும். இந்த TOOLSஐ எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.
Tune Image
இந்த Tune Imageஐ பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தின் Brightness, Contrast,Saturation,Ambiance,Highlights, Shadows,Warmth ஆகியவற்றை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும். இந்த அமைப்புகளை அதிகரிப்பது மற்றும் குறைப்பது ஆகியவற்றை பயன்படுத்தி நமது புகைப்படத்தில் ஒரு சில வண்ணங்களை மாற்ற முடியும்.
Curves & Rotate
இந்த Toolஐ பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தில் சிவப்பு,மஞ்சள்,பச்சை கருப்பு,நீலம்,ஊதா இது போன்ற வண்ணங்களை மாற்ற முடியும். மற்றும் இது போன்ற நிறங்களை நமக்கு தேவையான அளவுகளில் வைத்துக் கொள்ளலாம்.இந்த Toolஐ பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தினை கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் சுழற்றி நமக்குத் தேவையான திசைகளில் பொருத்துவதற்கு இது உதவுகிறது.
Perspective & Expand
Perspective Toolஐ பயன்படுத்தி நமது புகைப்படத்தில் பார்க்கும் திசைகளை மாற்றுவதற்கு இது உதவுகிறது. அதாவது நமது புகைப்படத்தின் திசைகளை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மற்றும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் மாற்றுவதற்கு இது உதவுகிறது.இந்த Toolஐ பயன்படுத்தி நமது புகைப்படத்தை பெரிது படுத்தும் போது அதற்கு இடையில் தோன்றும் இடைவெளிகளை தானாக பொருத்தி கொள்கிறது. இதுவே இந்த Expand Toolன் பயன்பாடு ஆகும்.
Selective & Glamour Glow
இந்த Toolஐ பயன்படுத்தி புகைப்படத்தில் நமக்கு தேவையான இடங்களில் கிளிக் செய்து Brightnessஐ அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும்.Glamour Glow Toolல் ஐந்து வகையான புகைப்பட எடிட்டிங் மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உங்களுக்கு தேவையான எடிட்டிங் மாதிரியை கிளிக் செய்தவுடன் உங்கள் புகைப்படத்தில் அது சேர்ந்துவிடும்.
Vintage & Noir
Vintage Tool வெவ்வேறு வகையான 12 கலர் பில்டர்களை கொண்டது. இதில் உங்களுக்கு தேவையான கலர் பில்டர்களை தேர்வு செய்து அந்த வண்ணத்தை உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.இதில் 14 வகையான கருப்பு நிற கலர் பில்டர்கள் இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான கலரை தேர்வு செய்து அதை உங்களுக்கு பிடித்ததை போன்று மாற்றி உங்களுடைய புகைப்படத்தை எடிட் செய்து கொள்Toolஐ பயன்படுத்தி புகைப்படத்தின் நடுபுறத்தை சாதாரணமாகவும் புகைப்படத்தின் வெளிப்புற ஓரத்தில் கருப்பு நிறமாக மாற்ற முடியும்.