🔥Instagram Trending Reels Video Editing Tamil |Alight Motion Video Editing Tamil|Alight Motion38

 அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Alight Motion செயலியை பயன்படுத்தி நமது போட்டோவை வைத்து எவ்வாறு ஒரு சிறப்பான வீடியோவாக அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று ஒரு சிறப்பான வீடியோவாக எவ்வாறு எடிட் செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.அது மட்டும் இல்லாமல் இந்த வீடியோவை எடிட் செய்வதற்கு தேவையான பீட் மார்க் மற்றும் ஷேக் Effectஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்றும் இந்த பதிவில் பார்ப்போம்.

இப்போது Alight Motion செயலியை பற்றி சுருக்கமாக பார்ப்போம் இந்த Alight Motion செயலியை பயன்படுத்தி நமது போட்டோ மற்றும் வீடியோவை ஒரு சிறப்பான போட்டோவாக அல்லது வீடியோவாக எடிட் செய்ய முடியும். இந்த Alight Motion செயலியை பயன்படுத்தி மிகவும் அருமையான வாட்ஸப் ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் எளிமையான முறையில் எடிட் செய்ய முடியும். இந்த செயலியை உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பான செயலியாகும் இந்த செயலியில் பல்வேறு விதமான வீடியோ எடிட்டிங் ஆப்ஷன்கள் உள்ளது மற்றும் இந்த செயலியை பயன்படுத்துவது மிக மிக எளிமையான முறையாகும். எனவே இதனை பயன்படுத்துவரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இப்பொழுது இந்த செயலியை பயன்படுத்தி நமது வீடியோவை எவ்வாறு எடிட் செய்வது மற்றும் இந்த Alight Motion செயலில் உள்ள டூல்களின் பயன்பாடுகளை விரிவாக பார்ப்போம்.

Step 1

முதலில் நம் வீடியோவை எடிட் செய்ய தேவையான பீட் மார்க் மற்றும் ஷேக் Effectஐ Alight Motion செயலியில் எவ்வாறு இம்போர்ட் செய்வது என்று பார்ப்போம்.அதற்கு முதலில் Alight Motion செயலியை திறந்து கொள்ளவும் பிறகு நாம் எடிட் செய்ய தேவையான பீட் மார்க் மற்றும் ஷேக் Effectஐ Alight Motion செயலிக்குள் இம்போர்ட் செய்து கொள்ளவும் இம்போர்ட் செய்த பிறகு கீழ்ப்பகுதியில் + இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதன் அருகில் Project என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை தொட்டவுடன் அந்தப் பக்கத்தில் நம் இம்போர்ட் செய்த பீட் மார்க் மற்றும் சேக் Effect ப்ராஜெக்ட் அங்கு இருக்கும்.

Step 2

நிலை ஒன்றை முடித்தவுடன் அடுத்ததாக நிலை இரண்டில் கீழ் பகுதியில் + இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள என்ற 9:16 ஸ்கிரீன் அளவை தேர்வு செய்த பின் அதற்கு கீழ் பகுதியில் Creat Project என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அதில் வலது புறத்தின் கீழ் பகுதியில் + இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள Media என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அதில் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்யவும் தேர்வு செய்தவுடன் அதனை முழு ஸ்கிரீன் அளவுக்கு செட் செய்ய வலது புறத்தின் மேல் பகுதியில் மூன்று புள்ளிகள் இருக்கும் அதனை கிளிக் செய்தவுடன் கீழ்ப்பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் Fill Composition Area என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய போட்டோ முழு ஸ்கிரீன் அளவாக பொருந்தி விடும். அடுத்ததாக பின் வருவதற்கான ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்த பின் வலது புறத்தின் மேல் பகுதியில் ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் கடைசியாக current frame as png என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை தேர்வு செய்தவுடன் கீழ்ப்பகுதியில் export என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் ஐந்து வினாடிகள் காத்திருக்கவும் பின்னர் கீழ் பகுதியில் save என்ற ஆப்ஷன் வரும் அதனை கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் அதற்கு கீழ் பகுதியில் க்ளோஸ் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் பின்வருவதற்கான ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்து ப்ராஜெக்ட் அதாவது பீட் மார்க் மற்றும் சேக் Effect உள்ள அந்தப் பக்கத்திற்கு வரவும்.

Step 3

நிலை மூன்றில் முதலாவதாக பீட் மார்க் ப்ரொஜெக்ட்டை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் இதில் முதலாவதாக நாம் ஒரு வீடியோ Templateஐ சேர்க்க வேண்டும் அதனை சேர்ப்பதற்கு முதலில் வலது புறத்தின் கீழ் பகுதியில் உள்ள + இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும் தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள media ஆப்ஷனை தேர்வு செய்யவும் தேர்வு செய்தவுடன் இப்பொழுது நாம் add செய்யும் வீடியோ டெம்ப்ளேட்டை தேர்வு செய்யவும் தேர்வு செய்தவுடன் அது நமது பீட்மார்க்கில் சேர்ந்து விடும். இப்பொழுது மேலே உள்ள அம்புக்குறியை தொட்டவுடன் அது முதல் பீட் மார்க்கிற்கு சென்று விடும் இப்பொழுது இந்த பீட்மார்க்கில் நம்முடைய போட்டோக்களை ஆட் செய்ய வேண்டும் அதற்கு முதலில் வலது புறத்தின் கீழ் பகுதியில் இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள media என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் அது உங்களுடைய கேலரியில் உள்ள போட்டோக்களை காட்டும் அதில் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்த உடன் அடுத்ததாக அந்த போட்டோவை முழு ஸ்கிரீன் அளவிற்கு செட் செய்வதற்கு வலது புறத்தின் மேல் பகுதியில் உள்ள மூன்று புள்ளிகளை தொடவும் தொட்டவுடன் அதன் கீழ் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் fill composition area என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் இதனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய போட்டோ முழு ஸ்கிரீன் அளவிற்கு பொருந்தி விடும். அடுத்ததாக மீண்டும் மேல் பகுதியில் உள்ள அம்புக்குறியை தொடவும் தொட்டவுடன் அது அடுத்த பீட் மார்க்கிற்கு சென்று விடும் இப்பொழுது அதிகமாக உள்ள போட்டோவை வெட்டுவதற்காக கீழ்ப்பகுதியில் நான்காவதாக உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும் அதனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய போட்டோ சரியான அளவிற்கு துண்டாகிவிடும். மீண்டும் இதே போன்று அனைத்து பீட் மார்க்கிலும் உங்களுடைய போட்டோவை add செய்து கொள்ளவும்.

Step 4

நிலை நான்கில் பீக்மார்க்கில் அனைத்து போட்டோவையும் ஆட் செய்த பிறகு இப்பொழுது நம்ம add செய்த போட்டோவிற்கு ஷேக் Effectஐ காப்பி செய்து பேஸ்ட் செய்ய வேண்டும் அதற்கு முதலில் பின்வருவதற்காக இடதுபுறத்தின் மேல் பகுதியில் <- இது போன்ற ஒரு குறியிடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் பீட் மார்க் மற்றும் Shake Effect உள்ள பக்கத்திற்கு உங்களை அழைத்து வரும் அதில் ஷேக் Effectஐ கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அதில் இரண்டு போட்டோவிற்கு ஷேக் எஃபெக்ட் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் முதலாவதாக உள்ள போட்டோவை கிளிக் செய்தவுடன் கீழ்ப்பகுதியில் தோன்றும் Effect என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் இடது புறத்தின் கீழ் பகுதியில் 3 புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்து உடன் மேல் புறத்தில் தோன்றும் ஆப்ஷன்களில் copy effect என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் இடதுபுறத்தின் மேல் பகுதியில் பின் வருவதற்கான ஆப்ஷன் கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் அடுத்ததாக பீட் மார்கை கிளிக் செய்யவும் கிளிக் செய்த பின் இந்த ஷேக் effectஐ தேவையான இடங்களில் பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும் அடுத்ததாக மீண்டும் வலது புறத்தின் மேல் பகுதியில் பின் வருவதற்கான ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் மீண்டும் shake effectஐ கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் இரண்டாவதாக உள்ள போட்டோவை கிளிக் செய்தவுடன் இடது புறத்தின் கீழ் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் effect என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் இடது புறத்தின் கீழ் பகுதியில் தோன்றும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து copy effect சென்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும் பின்பு இடது புறத்தின் மேல் பகுதியில் பின்வருவதற்கான ஆப்ஷனை கிளிக் செய்து பின் வரவும் வந்தபின் மீண்டும் பீட் மார்கை கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் இந்த effectஐ பேஸ்ட் செய்ய வேண்டிய போட்டோவை கிளிக் செய்த பின் கீழ் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் effect என்ற ஆப்ஷனை கிளிக் செய்த பின் அதே போன்று வலது புறத்தின் கீழ் பகுதியில் தோன்றும் மூன்று புள்ளியை கிளிக் செய்தவுடன் அதன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் past effect என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இந்த effectஐ போட்டோக்களில் பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

Step 5

நிலை ஐந்தில் நாம் இப்போது எடிட் செய்த வீடியோவை எவ்வாறு சேவ் செய்வது என்று பார்ப்போம் அதற்கு முதலில் வலது புறத்தின் மேல் பகுதியில் ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் இதில் முதலாவதாக வீடியோ என்று அதற்கு வலது புறத்தில் கடைசியில் > இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும் தொட்டவுடன் அதற்கு கீழ் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் Export Resolution என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் அதில் பல்வேறு வகையான Resolution ஆப்ஷன்கள் இருக்கும் அதில் 720 pixel என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும் தேர்வு செய்தவுடன் அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் Export என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் நம் எடிட் செய்த வீடியோ சேவ் ஆக தொடங்கிவிடும். அது 100% முடிந்த பிறகு பின்பு கீழ்ப்பகுதியில் சேவ் என்ற ஆப்ஷன் தோன்றும் அதனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய வீடியோ உங்களுடைய கேலரியில் சேர்ந்து விடும்.

> CC Effect Preset 2:

       Download

Leave a Comment