How to Use Face App in Tamil-தமிழ்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Face app செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை எவ்வாறு எளிமையான முறையில் எடிட் செய்வது மற்றும் Face app செயலியை எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்றும் பார்ப்போம்.

இந்த Face app எடிட்டிங் செயலி இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த புகைப்பட எடிட்டிங் செயலி ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை ஒரு சிறந்த புகைபடமாக மாற்ற முடியும். அதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும்.

முதலில் இந்த Face app செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து அனைவரும் முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இந்த செயலியில் நமது போட்டோவை பயன்படுத்தி பல்வேறு வகைகளில் நமக்கு தேவையானதை போன்று எடிட்டிங் செய்ய முடியும் அதாவது நமது இளம் வயது போட்டோவை எடிட் செய்து முதுமையான போட்டோவாக மாற்ற முடியும் மற்றும் நமது போட்டோவில் வண்ணங்களை அட்ஜஸ்ட் செய்து மாற்ற முடியும் அது மட்டுமின்றி போட்டோவில் உள்ள ஆணை பெண் போன்று மாற்ற முடியும் அதே போன்று போட்டோவில் உள்ள பெண்ணை ஆண் போன்று மாற்ற முடியும் மற்றும் முகத்தை அழகுபடுத்தும் பல்வேறு வகையான எடிட்டிங் ஆப்ஷன்களும் இதில் அடங்கும்.

இந்த செயலியில் நமது போட்டோவின் Backgroundஐ ஒரே கிளிக்கில் எளிமையாக மாற்ற முடியும் மற்றும் ஒரு போட்டோவை வைத்து அந்த போட்டோவை நமக்குப் பிடித்தவர்களின் முகத்தை போன்று மாற்ற முடியும் இது போன்ற இந்த செயலியில் அற்புதமான எடிட்டிங் ஆப்ஷன்கள் உள்ளது

Step 1:

முதலில் Face app செயலியை திறக்கவும் திறந்தவுடன் அதற்குக் கீழ் பகுதியில் கேலரி என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போட்டோவை தேர்வு செய்யவும் இதுவே இந்த செயலியின் முதல் படிநிலை ஆகும்.

Step 2:

போட்டோவை தேர்வு செய்தவுடன் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அதில் கீழ்பகுதியில் வெவ்வேறு வகையான எடிட்டிங் ஆப்ஷன்கள் இருக்கும் அதில் Face Swap என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தின் கீழ் பகுதியில் இரண்டாவதாக உள்ள Face Swap என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் Find Celebrities என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அதில் உங்களுக்கு தேவையான போட்டோவை கிளிக் செய்த பின் அதற்குக் கீழ் பகுதியில் use என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் 10 முதல் 15 வினாடிகள் காத்திருக்கவும் பின்பு நீங்கள் தேர்வு செய்த போட்டோவின் முகம் பெண்ணின் முகத்தைப் போன்று மாறிவிடும்.

Step 3:

இப்பொழுது நீங்கள் எடிட் செய்த போட்டோவினை Save செய்வதற்கு மேலே உள்ள Save என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் ஒரு சில வினாடிகளில் நீங்கள் இப்போது எடிட் செய்த அந்த போட்டோ உங்களுடைய கேலரியில் சேர்ந்திருக்கும்.

பதிவிரக்கம் செய்யும் முறை:

முதலில் கீழே உள்ள Download Here என்பதை தொடவும் தொட்டவுடன் 30 நிமிடம் காத்திருக்கும் பின் அந்த இடத்தில் Download என்று தோன்றும் அதை தொடவும்.தொட்டவுடன் அது உங்களை Google Driveகு அழைத்து செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான Appஐ பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.

Download Now

Leave a Comment