Kandaa Vara Sollunga PicsArt Photo Editing Tamil-தமிழ்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Picsart செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று எவ்வாறு எடிட் செய்வது என்றும் மற்றும் அதற்கு தேவையான Background & Pngஐ எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்றும் இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த Picsart செயலியை பயன்படுத்தி நமது போட்டோவை எடிட் செய்வது மிகவும் எளிமையான முறையாகும். இந்த செயலியில் வெவ்வேறு மாதிரிகளில் நமது போட்டோக்களை எடிட் செய்ய முடியும்.Picsart செயலி Android போனில் ஒரு மிகச்சிறந்த போட்டோ எடிட்டிங் செயலி ஆகும்.

இப்போது இந்த செயலியை பயன்படுத்தி எவ்வாறு எளிமையான முறையில் கர்ணன் படத்தில் வரும் போட்டோவை போன்று எடிட் செய்வது என்று படிநிலை படிநிலையாக பார்க்கலாம்.மற்றும் இந்த போட்டோவை எடிட் செய்வதற்கு தேவையான Background &Pngஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது அதனை பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Step 1:

முதலில் Picsart செயலியை திறந்தவுடன் அதன் கீழ் பகுதியில் + இது போன்ற ஒரு குறியீடு ரோஸ் நிறத்தில் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று தோன்றும்.

அதில் முதலாவதாக உள்ள Edit a Photo என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் உங்களது Galleryகு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த Backgroung Imageஐ தேர்வுசெய்யவும்.

Step 2:

Background Imageஐ தேர்வு செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று இருக்கும்.

இதில் கீழ் பகுதியில் போட்டோவை எடிட் செய்வதற்கு தேவையான வெவ்வேறு எடிட்டிங் Tool ஆப்ஷன் இருக்கும் அதன் மீது விரலை வைத்து வலது புறம் இருந்த இடது புறமாகச் தள்ளும் போது அதில் Add Photo என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அது உங்களை Galleryகு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்யவும்.

Step 3:

நிலை 3 போட்டோவை சேர்த்தவுடன் கீழே உள்ள ஆப்ஷன்களில் Effects என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.கிளிக் செய்தவுடன் அதன் கீழ் பகுதியில் SKECTH என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அதில் இரண்டாவதாக உள்ள SKECTH 1 என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அந்த ஆப்ஷனின் நடுப்பகுதியில் அதை Adjust செய்வதற்கான ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று இருக்கும்.

அதன் அளவுகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் சரியாக வைத்துக் கொள்ளவும்.

Horizontal = 0

Vertical = 0

Line = 10

Black and White =15

Fade = 0

வைத்தபின் அதன் கீழ் பகுதியில் கருப்பு நிற வண்ணத்தை தேர்வு செய்யவும் தேர்வு செய்தவுடன் மேலே நடுப்பகுதியில் அதை அழிப்பதற்கான ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் மூன்றாவதாக தோன்றும் Erase என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.கிளிக் செய்த பின் அதன் அளவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் போன்று சரியாக பொருத்திக் கொள்ளவும்.

Size = 15

Oppacity = 100

Hardness = 99

சரியாக வைத்தபின் முகத்தில் உள்ள கருப்பு கோடுகளை மட்டும் அழித்துக் கொள்ளவும். அழித்தபின் வலது புறத்தின் மேல் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும் மீண்டும் அதே இடத்தில் உள்ள அதே குறியீடை கிளிக் செய்யவும்.

Step 4:

நிலை நான்கில் நமது போட்டோவில் உள்ள Backgroundஐ மட்டும் எவ்வாறு எளிமையான முறையில் அழிப்பது என்று பார்ப்போம். முதலில் கீழே உள்ள ஆப்ஷன்களில் Cutout என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் இரண்டாவதாக உள்ள Outline என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் நமது போட்டோவில் குறிப்பிட்ட நமது உருவத்தை மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று தேர்வு செய்து கொள்ளவும்.

தேர்வு செய்தவுடன் அந்த குறிப்பிட்ட இடம் மட்டும் சிவப்பு நிறத்தில் மாறிவிடும் இப்பொழுது சிவப்பு நிறமாக உள்ள இடம் மட்டும் நமக்கு தெரியும் மற்ற இடங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.இதனால் சிவப்பு நிறம் நமது குறிப்பிட்ட இடத்தை தவிர வேறு இடத்தில் தேர்வாகி இருந்தால் அதை அழிப்பதற்கு கீழ்ப்புறத்தில் உள்ள Erase என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.கிளிக் செய்தவுடன் மேலே தோன்றும் அளவுகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் சரியாக வைத்துக் கொள்ளவும்.

Size = 27

Hardness = 97

அளவுகளை சரியாக வைத்தபின் நாம் தேர்வு செய்த குறிப்பிட்ட இடத்தை தவிர வெளிப்புறத்தில் தேர்வாகி இருந்தால் அதை அழித்துக் கொள்ளவும் இதே போன்று நாம் தேர்வு செய்த இடத்தின் உள் பகுதியில் ஏதேனும் பகுதிகள் தேர்வாகமல் இருந்தால் அதனை தேர்வு செய்ய கீழ்ப்புறத்தில் உள்ள Brush என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் சரியாக வைத்துக் கொள்ளவும்.

Size = 30

Hardness = 99

வைத்தபின் தேர்வாகமல் இருக்கும் இடத்தினை தேர்வு செய்து கொள்ளவும் இவ்வாறு செய்தபின் வலதுபுறத்தின் மேல் பகுதியில் உள்ள Save என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Step 5:

Save என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று உங்களுடைய போட்டோவையும் சரியாக நகர்த்தி பொருத்திய பின் கீழ் புறத்தில் ஐந்தாவதாக உள்ள Effect என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அதில் B&W என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அதில் வெவ்வேறு வகையான கலர் பில்டர் ஆப்ஷன்கள் இருக்கும் அதில் B&W HDR என்ற கலர் பில்டர் ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வலது புறத்தில் மேல் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

Step 6:

நிலை ஐந்தை முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று இருக்கும்.

இதில் கீழே உள்ள ஆப்ஷன்களில் கடைசிக்கு முன்னதாக இருக்கும் Blend என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் மேலே தோன்றும் ஆப்ஷன்களில் நான்கவதாக உள்ள Darken ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வலது புறத்தின் மேல் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும். இப்பொழுது போட்டோவை Save செய்ய மேல்பகுதியில் Save செய்வதற்கான ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய போட்டோ உங்களுடைய Galleryல் சேர்ந்திருக்கும்.

Download Now

Leave a Comment