snapseed dark effect photo editing | Snapseed best photo editing in tamil | photo editing tamil

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Snapseed செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவை ஒரு சிறப்பான போட்டோவாக அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று ஒரு மிகச்சிறந்த போட்டோவாக எவ்வாறு எடிட் செய்வது என்றும் மற்றும் அதை எடிட் செய்வதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்றும் இந்த பதிவில் பார்ப்போம்.Snapseed செயலியை பற்றி ஒரு சுருக்கமான பதிவை பார்ப்போம். இந்த செயலி ஒரு மிகச் சிறந்த போட்டோ எடிட்டிங் செயலியாகும்.இந்த செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு சிறப்பான போட்டோவாக மாற்ற முடியும். இந்த எடிட்டிங் செயலியை அனைவராலும் மிக எளிமையாக பயன்படுத்த முடியும் மட்டம் இந்த செயலியை உலகம் முழுதும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இப்பொழுது இந்த செயலியை பயன்படுத்தி நமது போட்டோவை எவ்வாறு எடிட் செய்வது என்று படிப்படியாக பார்க்கலாம்.

Step 1:

முதலில் Snapseed செயலியை திறக்கவும் திறந்தவுடன் அதில் + இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்யவும். இந்த போட்டோவை தேர்வு செய்யும் நிலையே Snapseed எடிட்டிங்கின் முதல் நிலையாகும்.

Step 2:

நிலை ஒன்றை முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்ற Snapseedன் முக்கியமான எடிட்டிங் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.இங்கு கீழ்புறத்தில் உங்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கும் அதில் இரண்டாவதாக உள்ள TOOLS என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவது வரிசையில் கடைசியாக உள்ள Vintage என்ற ஆப்ஷனை தொடவும்.தொட்டவுடன் கீழ்பகுதியில் வெவ்வேறு வகையான கலர் பில்டர் ஆப்ஷன்கள் தோன்றும் அந்த ஆப்ஷன்களில் மீது விரலை வைத்து வலது புறமிருந்து இடதுபுறமாக தள்ளும்போது அதில் ஒன்பதாவதாக உள்ள கலர் பில்டர் ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் கீழ்ப்பகுதியில் நடுவில் கலர் பில்டர் ஆப்ஷனை அட்ஜஸ்ட் செய்வதற்கான ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அதன் அளவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் போன்று சரியாக வைத்துக் கொள்ளவும்.