How to use and download snapseed app in simple method

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Snapseed செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவை ஒரு சிறப்பான போட்டோவாக அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று ஒரு மிகச்சிறந்த போட்டோவாக எவ்வாறு எடிட் செய்வது என்றும் மற்றும் அதை எடிட் செய்வதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்றும் இந்த பதிவில் பார்ப்போம்.

Snapseed செயலியை பற்றி ஒரு சுருக்கமான பதிவை பார்ப்போம். இந்த செயலி ஒரு மிகச் சிறந்த போட்டோ எடிட்டிங் செயலியாகும்.இந்த செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு சிறப்பான போட்டோவாக மாற்ற முடியும். இந்த எடிட்டிங் செயலியை அனைவராலும் மிக எளிமையாக பயன்படுத்த முடியும் மட்டம் இந்த செயலியை உலகம் முழுதும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இப்பொழுது இந்த செயலியை பயன்படுத்தி நமது போட்டோவை எவ்வாறு எடிட் செய்வது என்று படிப்படியாக பார்க்கலாம்.

Step 1:

முதலில் Snapseed செயலியை திறக்கவும் திறந்தவுடன் அதில் + இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்யவும். இந்த போட்டோவை தேர்வு செய்யும் நிலையே Snapseed எடிட்டிங்கின் முதல் நிலையாகும்.

Step 2:

நிலை ஒன்றை முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்ற Snapseedன் முக்கியமான எடிட்டிங் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.இங்கு கீழ்புறத்தில் உங்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கும் அதில் இரண்டாவதாக உள்ள TOOLS என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவது வரிசையில் கடைசியாக உள்ள Vintage என்ற ஆப்ஷனை தொடவும்.தொட்டவுடன் கீழ்பகுதியில் வெவ்வேறு வகையான கலர் பில்டர் ஆப்ஷன்கள் தோன்றும் அந்த ஆப்ஷன்களில் மீது விரலை வைத்து வலது புறமிருந்து இடதுபுறமாக தள்ளும்போது அதில் ஒன்பதாவதாக உள்ள கலர் பில்டர் ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் கீழ்ப்பகுதியில் நடுவில் கலர் பில்டர் ஆப்ஷனை அட்ஜஸ்ட் செய்வதற்கான ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அதன் அளவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் போன்று சரியாக வைத்துக் கொள்ளவும்.

Step 3:

நிலை மூன்றில் கீழ்ப்பகுதியில் இரண்டாவதாக உள்ள Tools என்ற ஆப்ஷனை தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் மூன்றாவது வரிசையில் முதலாவதாக உள்ள Selective என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் உங்களுடைய போட்டோவில் தோல் தெரியும் இடத்தின் மீது கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் உங்களுடைய இரண்டு விரலை வைத்து நகர்த்தும் போது ஒரு வட்டம் ஏற்படும் அதனை நீங்கள் உங்களுக்கு தேவையான அளவில் பொருத்திய பின்பு உங்களுக்கு தேவையான Brightnessஐ அதிகரித்துக்கொள்ளலாம். இதேபோன்று உங்களுடைய போட்டோவில் தோல் தெரியும் இடத்தில் உங்களுக்கு தேவையான அளவில் Brightnessஐ அதிகரித்துக் கொள்ளலாம். அதிகரித்த பின் வலது புறத்தின் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.

Step 4:

இந்த நிலை நான்கில் முதலாவதாக கீழே உள்ள மூன்று ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள Tools என்ற ஆப்ஷனை தொடவும் தொட்டவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் முதலாவது வரிசையில் நான்காவதாக உள்ள White Balance என்ற ஆப்ஷனை தொடவும்.